திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த வயலூர் கிராமத்தில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலக திறப்பு விழா மற்றும் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் வயலூர் ராமநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மற்றும் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதிமுக கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பான வேட்டி, சேலை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகளை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினர்.
அதிமுக கழக நிர்வாகிகள் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜாகிர் உசேன் ஒன்றிய செயலாளர்கள் திருமூலன், துரை, அரங்கநாதன் நகர செயலாளர் வெங்கடேசன், மாவட்ட கழக நிர்வாகிகள் ரகு, பாலன், ராணி பெருமாள், கன்னியப்பன், அருண்குமார், அரவிந்தன், நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன்.
ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சிவா, ஒன்றிய கவுன்சிலர் ராஜ் கணேஷ், சுரேஷ், தூசி தலைவர் வெற்றிச்செல்வன். ராஜ்மோகன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.