பொங்கல் பண்டிகையொட்டி திருவண்ணாமலையில் கரும்பு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை சுற்றுப் பகுதியில் பனிக்கரும்பு பயிரிடப்படுவதில்லை. இதனால் பண்ருட்டி மற்றும் திருக்கோவிலுாரில் இருந்து மினி லாரிகள் மூலம் கரும்புகள் கொண்டுவரப்பட்டு ரேஷன் கடைகளில் இலவசமாக கரும்பு விநியோகிப்பதால், பண்ருட்டியில் கரும்பு விலை உயர்ந்துள்ளதாம்.
கடந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட கரும்பு கட்டு ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது கரும்பு கட்டு ரூ.500-க்கு விற்கப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது.
திருவண்ணாமலை கடை வீதிகளில் பொதுமக்கள் ஆர்வமாக திரண்டு வந்து மகிழ்ச்சியுடன் கரும்பு வாங்கிச் சென்றனர்.