கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட வேட்டவலம் அடுத்த நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குனர், உழவர் பயிற்சி நிலையம் (பொறுப்பு) ராமநாதன் தலைமை தாங்கினார். கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் உதவி – இயக்குனர் அன்பழகன், துணை வேளாண் அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்ந்த மானிய திட்டங்கள், எள், பயிர், சாகுபடியில் விதை நேர்த்தி, எள் பயிர் சுழற்சி முறை, தரமான விதை, உயிர் உரங்கள் பயன்பாடு, எள் சாகுபடியில் உயர் விளைச்சல் ரகங்கள், பயிர் இடைவெளி, தொழு உரங்கள் பயன்பாடு, விதை நேர்த்தி தொழில் நுட்பம், உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு ஆகியவை குறித்து வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சுகந்தி, வேளாண் அலுவலர் சவுந்தர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
ஏற்பாடுகளை. உதவி வேளாண் அலுவலர் வேடியப்பன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சங்கீதா, உதவி மேலாளர் மீனா ஆகியோர் செய்து இருந்தனர்.