பார்வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில்ஏராளமான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டு ஆரவாரம்
வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் ரஜினி நடித்த வேட்டையன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அது பற்றி தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோயில் வளாகத்தில் திரண்டு ஆரவாரம் செய்தனர்.
டி.ஜி. ஞானவேல்ராஜா எழுதி இயக்கும் வேட்டையன் படம் ஷூட்டிங் புதுச்சேரி வில்லியனூர் புகழ் பெற்ற திருகாமேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதற்காக புதுச்சேரி நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படபிடிப்பில் பங்கேற்றார்.
சூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினியை காண்பதற்கு கோயில் வளாகத்திற்குள் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டனர் அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கை குலுக்கியும் கையை அசைத்தபடியும் கையெடுத்து கும்பிட்ட படியும் சென்றார்.
ரஜினியை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.