மக்களின் தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெருமிதுடன் கூறினார்.
துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சிகளில் ரூ. 10 கோடியே 85 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி, முடிவுற்ற அரசு கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சிகளில் ரூ. 10 கோடியே 85 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி, முடிவுற்ற அரசு கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்கத் துணை தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது
திராவிட மாடல் ஆட்சியில் பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து முடிக்கப்பட்டுருக்கிறது. புதிய சிமெண்ட் சாலை அமைத்தல், குடிநீர் இணைப்பு, பக்க கால்வாய் அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், புதிய கிணறு அமைத்தல், பேவர்பிளாக் சாலை அமைத்தல், ஊராட்சி மன்ற கட்டிடம் திறத்தல், 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டி, பள்ளிக்கூடம் கட்டடம் அமைத்தல், பேருந்து நிழற்குடை, பள்ளி கட்டமைப்பு மேம்படுத்தும் பணி, கூடுதலாக பள்ளி வகுப்பறைகள், ரேணுகாம்பாள் கோவில் குளத்திற்கு சுற்றுசுவர் அமைத்தல், அங்கன் வாடி மைய கட்டடம், நெற்களஞ்சியம் அமைத்தல் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட், சிப்கோ போன்ற தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சி அமைந்த உடன் சிப்கோ தொழிற் சாலைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி என்பதால், கால்நடை மருத்துவ கல்லூரி செங்கம் பகுதியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரிய கிளாம்பாடி சிறப்பு என்னவென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் 2011-ம் ஆண்டு நமக்கு நாமே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு கிராமப் புறங்களில் ஊராட்சி மன்ற தலைவரை சந்திக்க வேண்டும் என்று ஆணையிட்டனர். அதில் இந்த ஊராட்சியை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் தரையிலே அமர்ந்த சிறப்புக்குரிய ஊராட்சி ஆகும். தேவைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்லும். எனவே தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இவ்வாறு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நேற்று காலை திருவண்ணாமலை நகராட்சி திருக்கோவிலூர் சாலையில் புனரமைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மகளிர் திட்ட இயக்குநர் சரண்யா தேவி, நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், உதவி கோட்டப் பொறியாளர் வெங்கடேசன், சிறப்பு தலைமைப் பொறியாளர் வெங்கடாச்சலம், பொதுப்பணித்துறை (க) செயற்பொறியாளர் கௌதமன், பொதுப்பணித்துறை (க) உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை (க) உதவி செயற்பொறியாளர் முகிலன், உதவி பொறியாளர் அருள் ஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீ.வெற்றிவேல், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு துணைத் தலைவர் உஷாராணி சதாசிவம், பெரிய கிளாம்பாடி ஊராட்சிமன்ற தலைவர் காயத்திரி செல்வேந்திரன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், நகரமன்ற துணைத் தலைவர் ராஜங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.