தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில், அருணை தமிழ்ச் சங்கம் கோலப்போட்டிகளை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு அருணைத் தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பரிசுகள் வழங்குகிறார்.
தமிழர் திருநாளாம் பொங்களை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில் 39 வார்டுகளிலும் அருணை தமிழ்ச் சங்கம் சார்பில், கோலப்போட்டிகள் நடைபெறவுள்ளது. 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் 12 மணி வரை, அதாவது போகிப் பொங்கல் இரவில் போடப்படும் கோலங்களை நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
திருவண்ணாமலை நகரின் 39 வார்டுகளிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வார்டிற்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் 5 என 8 பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனியே நடுவர் குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருணை தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்துகிற இந்த கோலப்போட்டியில் அன்பு சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
18.01.2024 வியாழக்கிழமை அன்று திருவண்ணாமலை, காந்தி நகர் பைபாஸ் சாலையில் நடைபெறும் தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பரிசுகள் வழங்குகிறார்.
ஒவ்வொரு வார்டிற்கும் முதல் பரிசாக ரூ. 7000 மதிப்புள்ள சிம்போனி ஏர்கூலரும், இரண்டாவது பரிசாக ரூ.6000 மதிப்புள்ள வி கார்டு ரிமோட் பேனும், மூன்றாம் பரிசாக
ரூ.3000 மதிப்புள்ள கேஸ் அடுப்பும் மற்றும் தோசை தவாவும், ஆறுதல் பரிசாக ரூ.1300மதிப்புள்ள சில்வர் ஹாட்பாக்சும் வழங்கப்படவுள்ளது.
கோலப்போட்டி ஏற்பாடுகளை அருணை தமிழ்ச் சங்கம் சார்பில் செயலாளர்வெ.ஆல்பெர்ட், பொருளாளர் எம்.இ.ஜமாலுதீன், இணைச் செயலாளர் எ.வ.வே.குமரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.