காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, அனந்த்நாக் மாவட்டம், கானாபால் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிப்புக்குள்ளானவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார்.
அவர் சென்ற கார் அனந்த்நாக் மாவட்டம் சங்கம் கிராமத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.சங்கம் கிராமத்தை அடைந்தபோது, முன்னே சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
மெகபூபா முப்தி காரின் முன்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனாலும் காருக்குள் இருந்த மெகபூபாபாவுக்கு பாதிப்புகள் ஏதுமில்லை. அவர் காயமின்றி அவர் உயிர் தப்பியுள்ளார். ஆனால், அவரின் பாதுகாப்பு அதிகாரிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.