தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமைல மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ,1000 ரொக்கப் பணம் ஆகியவை அடங்கிய பொங்கள் பரிசுத் தொகுப்பு வழங்கிட அரசு ஆணையிட்டு உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை (புதன்கிழமை) முதல் வருகிற – 13 தேதி வரை சம்மந்தபட்ட ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வினியோகம் செய்யப்படும். ெபாங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட விவரம் ரேஷன் அட்டைதாரர்களின் செல்போனுக்கு குருஞ் செய்தியாக அனுப்பப்படும்.
ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கு பயோமெட்ரிக் முறை மூலம் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04175-233063 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
மாவட்ட அளவில் தாலுகா வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள், உதவி ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டு உள்ளது