திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செங்கம் குமார் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த செங்கம் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், ராஜிவ் பஞ்சாயத்து ராஜ் சங்க அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செங்கம் குமாருக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.