திருவண்ணாமலையில் நன்செய் அறக்கட்டளை சார்பில் உழவருடன் மகிழ்வோம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரபாகரன் கலந்து கொண்டு, இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கிய 4 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் இருந்து இயற்கை விவசாயிகள் மற்றும் 200 விவசாய தொழிலாளர்களை ஒருங்கிணைத்து ‘உழவருடன் மகிழ்வோம்’ என்ற நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நன்செய் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் ஆனந்தராஜ் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரிம் கோர்ட் நீதிபதி பிரபாகரன் கலந்துகொண்டு, இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கிய 4 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 200 விவசாய தொழிலாளர்களுக்கு புத்தாடை மற்றும் விவசாய பணிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து பாரம்பரிய கிராமிய கலைகளான சிலம்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவாக பாரம்பரிய இயற்கை அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ‘உதவும் உள்ளங்கள்’ அறங்காவலர் சந்தானம், சென்னையை சேர்ந்த கீதாலட்சுமி, நளினி, கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.