தமிழக காவல் துறையில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் பி.அமுதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவு.
எஸ்.மல்லிகா போக்குவரத்து, சாலை பாதுகாப்பு ஐஜி (தனிப்பிரிவு ஐஜி).
ஏ.ராதிகா குற்றப்பிரிவு ஐஜி (தமிழக அமலாக்கத் துறை ஐஜி).
எம்.வி.ஜெய கௌரி காவலர் பயிற்சி கல்லூரி ஐஜி (ஆயுதப் படை ஐஜி).
ரூபேஷ் குமார் மீனா – தனிப்பிரிவு ஐஜி (சமூக நீதி, மனித உரிமை).
சி.மகேஷ்வரி தாம்பரம் மாநகரக் காவல் தலைமையிடம், போக்குவரத்துக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையர்.
பி.விஜயகுமார் – சென்னை பெருநகரக் காவல் மேற்கு மண்டல சட்டம் – ஒழுங்கு இணை ஆணையர் (ஆவடி சட்டம் – ஒழுங்கு காவல் இணை ஆணையர்).
திஷா மிட்டல் – விழுப்புரம் சரக டிஐஜி (சென்னை தொழில்நுட்பப் பிரிவு டிஐஜி).
ஜியாஉல் ஹக் – தஞ்சாவூர் சரக டிஐஜி (விழுப்புரம் சரக டிஐஜி).
டி.ஜெயசந்திரன் – சென்னை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு 14-0 ஐஜி (தஞ்சாவூர் சரக டிஐஜி).
எம். மனோகர் திருச்சி சரக டிஐஜி (சென்னை பெருநகரக் காவல் மேற்கு மண்டல சட்டம் – ஒழுங்கு இணை ஆணையர்).
பி.பகலவன் உணவுத் துறை டிஐஜி (திருச்சி சரக டிஐஜி).
பா.மூர்த்தி – திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையர் (தாம்பரம் சட்டம் – ஒழுங்கு இணை ஆணை.
ஜெ.மகேஷ் உள்நாட்டு பாதுகாப்பு நுண்ணறிவு பிரிவு டிஐஜி (பாதுகாப்பு பிரிவு டி.ஐஜி).
வி.கீதா – திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையர் மேற்கு (பொது விநியோகக் கடத்தல் தடுப்பு காவல் கண்காணிப்பாளர்).
கே.சரவணகுமார் கோவை மாநகரக் காவல் துணை ஆணையர்- தெற்கு (திருநெல்வேலி மாநகரக் காவல் தணை ஆணையர் மேற்கு).
கே.சண்முகம் – காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் – தெற்கு)
எம்.சுதாகர் சென்னை பெருநகரக் காவல் துறை பரங்கிமலை காவல் துணை ஆணையர் (காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்).
தீபக் சிவாஜ்-விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (சென்னை பெருநகரக் காவல் பரங்கிமலை காவல் துணை ஆணையர்).
ஜி.சஷாங்க் சாய் – சென்னை சிஐடி க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளர் (விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்).
வி.சசிமோகன் கோவை தீவி ரவாதத் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் (க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளர்).
எஸ்.செல்வராஜ் – அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (தமிழ்நாடு காவலர் அகாதெமி, வண்டலூர் துணை இயக்குநர்-நிர்வாகம்).
கே.பெரோஸ் கான் அப்துல்லா – விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்).
ஜி.சந்தீஷ் -ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (கோவை மாநகரக் காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் -வடக்கு).
பி.தங்கதுரை – கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்).
ஆர்.சிவ பிரசாத் – தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்).
டாங்கரே பிரவீன் உமேஷ் – மதுரை மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் (தேனி மாவட்டச் காவல் கண்காணிப்பாளர்).
எம்.கிங்ஸ்லின் பொருளாதாரக் குற்றப் பிரிவு மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளர் (சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் -3).
ஜி.எஸ்.அனிதா மதுரை மாநகர சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர் – வடக்கு (திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தலைமையகம்).
புக்யா ஸ்னேசுபிரியா – சென்னை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் (மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் – வடக்கு).
எஸ்.மேக்லினா ஜடன்-ஆவின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் (சென்னை தெற்கு மண்டலம் பொருளாதார குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்).
பந்தி கங்காதர் சென்னை போக்குவரத்து துணை ஆணையர் தெற்கு (ஆவின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி.)
ஆர். ராமகிருஷ்ணன் – சென்னை மண்டல பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளர். (சென்னை காவலர் நலப்பிரிவு ஏஐஜி).
இதில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு கடந்த ஆண்டு நவ.18 ஆம் தேதி புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில் வி.சசிமோகன் மற்றும் புக்யா ஸ்னேசு பிரியா கோவை மற்றும் சென்னையில் முதல் முறையாக பதவியேற்கவுள்ளனர்.
தேர்தலுக்காகப் பணியிட மாற்றம்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்த லையொட்டி, 3 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யும்படி மத்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டிய காவல் அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இதுவரை 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.