அயோத்தியில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது பயண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பினர் கும்பாபிஷேக விழாவின் அழைப்பிதழை அளித்திருந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவுடன் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 21-ம் தேதி அயோத்தி செல்லும் ரஜினி, 22ஆம் தேதி கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு வரும் 23 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.