தலைமை தேர்தல் ஆணையர் ஜன- 8, 9-ல் ஆலோசனை
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், சென்னையில் வரும் ஜன- 8, 9-ம் தேதிகளில், தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக அவ்வப்போது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் காணொளி வாயிலாகவும் ,நேரடியாக அந்த மாநிலங்களுக்கு சென்று இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர், ஜன- 8, 9 ஆகிய இரு தினங்களும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகின்றனர் .
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹீ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாநில சட்டம் – ஒழுங்கு, வாக்குச்சாவடிகள் நிலை போன்றவைக்குறித்தும் இதில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.