திருவண்ணாமலையில் ஜனவரி கிரி 8-ம் தேதி பிரதம மந்திரி தேசிய அப்ரண்டிஷ்சிப் மேளா மற்றும் மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடை பெறுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 8) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு 100-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்கின்றனர்.
என்.சி.வி.டி., மற்றும் எஸ்.சி.வி.டி., முறையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐ-களில் பயிற்சி பெற்று 2023- ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னதாகவோ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் Tr ade Apprentices-ஆக இந்த பயிற்சியில் சேரலாம்.
ஐடிஐயில் சேர்ந்து பயிற்சி ‘பெற முடியாத 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டயம், பட்டம் முடித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் Fresher Apprentice -ஆக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படைப் பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தொழில்பழகுநர் பயிற்சியும் பெற்று தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறலாம். தொழில்பழகுநர் பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படும்.
பயிற்சிக்குப் பிறகு இயக்குநர் ஜெனரல் பயிற்சியால் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் தொழில்பழகுநர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய தொழில்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகை வழங்கப்படும்.
முகாமில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் www. apprenticeshipinida.gov.in இணையதளத்தில் பதிவுசெய்து அதன் விவரத்துடன் அனைத்து அசல், நகல் சான்றிதழ்களுடன் முகாமுக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.