கடலூரில் வரும் 04.01.2024 முதல் 13.01.2024-ம் தேதி வரை நடைபெறும் இந்திய
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. ஆர்முள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக மேலும்
விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி
வாய்ந்த இளைஞர்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், தகவல்களுக்கு திருவண்ணாமலை, மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி
அறிந்து கொள்ளலாம் அல்லது 04175-233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்
வாயிலாகவும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்
பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.