வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த உள்ளவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார் .
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் .”வேலூர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதிகோரும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள https;//www.jallikattu.tn.gov.in/ என்ற இணையதள முகவரியின் Event Registaionல் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும்.
தங்களுடைய பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிலையை மேற்படி இணையதள முகவரியில் sign in என்ற பகுதியில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம் . எனவே, சம்பத்தப்பட்ட விழா குழுவினர் உடனடியாக அரசு இணையதள முகவரில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் ” என தெரிவித்துள்ளனர்.