திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.9.59 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 216 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் கடந்த டிசம்பர் 31ம் தேதி ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் அதிக அளவில் பீர் மற்றும் ஹாட் வகை மது பாட்டில்கள் விற்பனையாகின. அதன்படி கடந்த 31ஆம் தேதி மட்டுமே ரூ.4 கோடியே 92 லட்சத்து 78 ஆயிரத்து 540 அளவுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது
ஜனவரி 1ஆம் தேதி ரூ. 4 கொடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 60-க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ. 9 கோடியே 59 லட்சத்து 59 ஆயிரத்து 600-க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது