தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 4 (குரூப்-4) போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட உள்ளது. இந்த போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் ஜன.3ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இப்போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட விவரங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 4175 – 233381 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.